/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கருப்பசாமி வித்யாலயாவில் நோட்டு புத்தகம் வழங்கல்
/
கருப்பசாமி வித்யாலயாவில் நோட்டு புத்தகம் வழங்கல்
ADDED : நவ 19, 2024 07:08 AM

சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அடுத்த ஒரத்துார் கருப்பசாமி வித்யாலயா பள்ளியில் குழந்தைகள் தினத்தையொட்டி ஏ.வி.கே.எஸ்., அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிதி அறங்காவலர் சக்திவேல் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ்பாபு, அருணா முன்னிலை வகித்தனர்.
அறக்கட்டளை நிறுவனர் கருப்பசாமி ஆறுமுகம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கினார்.
மாணவ, மாணவிகள் பல்வேறு வேடங்கள் அணிந்து வந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தி போட்டிகளில் பங் கேற்றனர். 250 மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.
பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.