/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஸ்டாலின் பிறந்தநாள் நலத்திட்ட உதவி வழங்கல்
/
ஸ்டாலின் பிறந்தநாள் நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : மார் 02, 2024 11:05 PM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில், ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நெல்லிக்குப்பத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கீழ்பட்டாம்பாக்கம் திரவுபதி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை நகராட்சி சேர்மன் ஜெயந்தி வழங்கினார்.
நகர செயலாளர் மணிவண்ணன், துணை செயலாளர் பார்த்தசாரதி, மாவட்ட பிரதிநிதிகள் வேலு, வீரமணி, கதிரேசன், பொருளாளர் ஜெயசீலன், முகமது யாசின், ரமேஷ், ராமு, இளைஞரணி அமைப்பாளர் சாமிநாதன், துணை அமைப்பாளர் ராஜா, கவுன்சிலர்கள் ஜெயபிரபா, பூபாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

