/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்: மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை
/
விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்: மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை
விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்: மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை
விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்: மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை
ADDED : நவ 22, 2024 05:50 AM
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் அனுமதியின்றி மற்றும் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட 357 விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டது.
அரசியல் கட்சி தலைவர்களின் பிறந்த நாள் வாழ்த்து, குழந்தை செல்வங்களின் பிறந்த நாள் வாழ்த்து போன்ற அனைத்து விதமான விழாக்களுக்கும் சாலையில் பேனர் வைப்பது அதிகரித்து வருகிறது.
இந்த பேனர் கலாசாரம் அனுமதியில்லாமல் வைப்பதாலும், பல நாட்கள் சாலையிலேயே இருப்பதால் அதிகளவு காற்று பருவ மழையின்போது சாலையில் விழுந்து உயிர்சேதத்தை ஏற்படுத்தி வந்தது.
இது குறித்து பொதுநல வழக்கு சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்டது. அதன்பேரில் விசாரணை செய்த ஐகோர்ட், பேனர்களை உடனடியாக அகற்றுமாறும், தமிழகம் முழுவதும் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டுவிட்டதா என்கிற தகவல் அளிக்குமாறும் உத்தரவிட்டது.
அதனைத்தொடர்ந்து போலீசார் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றினர். அதன் பின்னர் அனுமதி பெற்று பேனர்கள் வைப்பது தொடர்ந்து வந்தது.
கடலுார் மாவட்டத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பேனர்கள் அகற்றிட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2 நாட்கள் முன்பு கடலுார் லாரன்ஸ்ரோடில் சிக்னல் கம்பத்தில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகை காற்றின்வேகத்தால் கீழே விழுந்ததில் பாலிட்டெக்னிக் விரிவுரையாளர் காயமடைந்தார்.
அதைத்தொடர்ந்து திடீர் சுறுசுறுப்படைந்த போலீசார் மழை மற்றும் புயல் காரணமாகவும், விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டு நீண்ட நாட்களாக பராமரிப்பில்லாத விளம்பர பேனர்கள் கீழே விழுந்து விபத்தினை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
மேலும், விளம்பர பேனர்கள் சாலையின் நடுவில் அமைப்பதாலும், கம்பத்தின் மேல் ஏற்படுத்துவதாலும், மழைக்காலம் மற்றும் புயல் காலங்களில் கீழே விழும் சாத்தியக் கூறுகள் அதிகமாக இருப்பதால் அவற்றினை அகற்ற உத்தரவிடப்பட்டது.
பேனர்கள் அகற்றும் குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கடலுார் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனுமதி பெறாமல் விதிமுறைக்கு மீறி வைக்கப்பட்ட விளம்பர பேனர்கள் அகற்றிட அறிவுறுத்தப்பட்டது.
மாநகராட்சி அளவில் 104 பதாகைகள், நகராட்சி அளவில் 154 பேனர்கள் மற்றும் பேரூராட்சி அளவில் 99 பதாகைகள் என மொத்தம் 357 விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன.
மேலும், அனுமதியின்றி விளம்பர பேனர்கள் அமைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டால் விளம்பர பேனர்கள் வைப்பவர் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.