தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பார்க்கவகுல முன்னேற்ற சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்

பார்க்கவகுல முன்னேற்ற சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்

பார்க்கவகுல முன்னேற்ற சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்


UPDATED : அக் 22, 2026 03:26 PM

ADDED : அக் 22, 2026 03:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2026 03:26 PM ADDED : அக் 22, 2026 03:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் பார்க்கவ குல மடத்தில், பார்க்கவ குல முன்னேற்றச் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.

மாவட்டத் தலைவர் கொளஞ்சியப்பர் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் கதிர்கணேச மூப்பனார், இணை பொதுச்செயலாளர் அன்புதுரை, துணைத் தலைவர் சுப்ரமணியன், அமைப்பு செயலாளர் பார்த்தசாரதி, மாவட்ட அவைத் தலைவர் ராஜகோபால், பாரி நற்பணி மன்றத் தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார்.

பொருளாளர் நெய்வேலி காமராஜ், தியாகராஜன், கடலுார் தலைவர் ராமலிங்கம், மாவட்ட செய்தி தொடர்பாளர் பெரியசாமி வாழ்த்தி பேசினர். கூட்டத்தில், ஒன்றிய, நகர, வட்ட, கிளை பொறுப்பாளர்களை நியமனம் செய்ய வேண்டும். சங்க பிரமுகர்கள் ஆனந்த், மணிமாறன் ஆகியோர் இறப்புக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

3 மாதத்திற்கு ஒருமுறை மாவட்ட செயற்குழு மற்றும் 6 மாதத்திற்கு ஒருமுறை பொதுக்குழு நடத்தப்பட வேண்டும். பார்க்கவ குல மடத்திற்கு கான்கிரீட் மேற்கூரை அமைப்பது, நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கிட மாநில சங்கத்திடம் கேட்டுக் கொள்வது. பார்க்கவன் குரல் தொடர்ந்து வெளிவர ‘மாவட்ட மலர்’ நுால் வெளியிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தலைமை சங்கம் சார்பில் தமிழக அளவில் ஐ.ஏ.எஸ்., இலவச பயிற்சி மையம் அமைக்கவும், உள்ளாட்சித் தேர்தலில் சங்கம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற செய்வது, தமிழகம் முழுவதும் பார்க்கவன் வங்கி துவங்கிட கேட்டுக்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விருத்தாசலம் வட்டத் தலைவர் பாலையா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us