ADDED : ஏப் 03, 2026 05:27 AM

கடலுார்: கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம், குறிஞ்சிப்பாடி தி.மு.க., அலுவலகத்தில் நடந்தது. அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கி பேசினார்.
இதில் வரும், சட்டசபை தேர்தலில் கடலுார் கிழக்கு மாவட்டத்திற்குபட்ட, 5 சட்டசபை தொகுதிகளிலும் தி.மு.க,. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் ஓட்டுச்சாவடிகள் வாரியாக அனைத்து கூட்டணி கட்சியினரும் ஒன்றிணைந்து மக்களை சந்தித்து தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும்.
ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளில் அனைத்துக்கட்சி கூட்டம், தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடத்த வேண்டும், கடலுாரில் வரும் 7ம் தேதி முதல்வர் ஸ்டாலின் மாவட்டத்தில் உள்ள 9 வேட்பாளர்களுக்கும் பிரசாரம் மேற்கொள்கிறார்.
அப்போது கூட்டணிக்கட்சியினர் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
இதில் தி.மு.க., புவனகிரி தொகுதி வேட்பாளர் சரவணன், மருதுார் ராமலிங்கம், குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் சிவக்குமார், மாவட்ட பொருளார் கதிவரன், வடலுார் நகர்மன்ற தலைவர் சிவக்குமார், நகர செயலாளர் தமிழ்ச்செல்வன், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி தலைவர் கோகிலா குமார், வடலுார் துணைத்தலைவர் சுப்புராயலு, பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
