தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

 மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

 மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு


ADDED : மார் 31, 2026 11:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2026 11:20 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வடலூர்: குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதி ஓட்டுச்சாவடி மையங்களில் மாவட்ட தேர்தல் அலு வலர் ஆய்வு மேற்கொண்டார்.

வடலுாரில், வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளி, குறிஞ்சிப்பாடி கல்குணம் அரசு உயர்நிலைப்பள்ளி, குள்ளஞ்சாவடி அடுத்த தம்பிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் மாவட்ட தேர்தல் அலுவலர் சிபி ஆதித்யா செந்தில்குமார், எஸ்.பி.ஜெயக்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் கூறுகையில், 'மாவட்டத்தில் உள்ள, 9 தொகுதிகளில் மொத்தம், 1327 இடங்களில், 2590 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு தேர்தல் நடக்க உள்ளது.

தேர்தல் பணிகளில், 2432 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மற்றும் நிலைய அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்திட, ஓட்டளிப்போர் எவ்வித அச்சமின்றி ஓட்டு போட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. தேர்தல் அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்திட, துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us