ADDED : ஏப் 23, 2026 11:31 PM

கடலுார்: தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடந்தது. கடலுார் மாவட்டத்திலுள்ள ஒன்பது சட்டசபை தொகுதிகளில் 2590 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது.
மாவட்டம் முழுவதும் 4500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கடலுார் மஞ்சக்குப்பம் ஜெயலட்சுமி கமிட்டி துவக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த ஓட்டுச்சாவடியில் மாவட்ட தேர்தல் அலுவலர்
சிபிஆதித்யா செந்தில்குமார், அவரது மனைவி அனுவுடன் வந்து ஓட்டு போட்டார். தொடர்ந்து அவர் கூறியதாவது:
மாவட்டத்தில் காலை 5:30 மணி முதல் ஓட்டுப்பதிவு துவங்குவதற்கான பணிகள் ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் துவங்கி விட்டது.
காலை 7:00 மணி முதல் ஓட்டுப்பதிவு துவங்கியது. அதை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
தொகுதி அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்கள் 225 பேர் ஓட்டுச்சாவடி வாரியாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் குறைபாடுகள் ஏற்பட்டால் அதை சரிசெய்ய 18 என்ஜினியர்கள் தயாராக உள்ளனர். சிறப்பான தேர்தலாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதேபோல, எஸ்.பி.,ஜெயக்குமார், தேவனாம்பட்டினம் அரசு கல்லுாரியில் அமைக்கப்பட்டிருந்த ஓட்டுச்சாவடியில் தனது ஓட்டைப்பதிவு செய்தார்.
