/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அக். 6 முதல் இடமாற்றம்
/
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அக். 6 முதல் இடமாற்றம்
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அக். 6 முதல் இடமாற்றம்
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அக். 6 முதல் இடமாற்றம்
ADDED : செப் 30, 2025 08:54 AM
கடலுார் : கடலுார் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வரும் 6ம் தேதி முதல் புதுப்பாளையத்திற்கு இடமாற்றம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பு:
கடலுார் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு நிலையம் ஆகிய அலுவலகங்கள் கடந்த 1992ம் ஆண்டு முதல் செம்மண்டலத்தில் சொந்த கட்டடத்தில் இயங்கி வருகிறது.
இந்த கட்டடம் சேதமடைந்து, பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதால் தற்காலிக மாற்று ஏற்பாடாக இந்த அலுவலகங்கள், எண்-8 ஆற்றங்கரை தெரு, புதுப்பாளையம், கடலுார் என்ற முகவரியில் உள்ள தனியார் வாடகை கட்டடத்திற்கு வரும் 6ம் தேதி முதல் இடமாற்றம் செய்யப்படுகிறது.
எனவே, வேலைவாய்ப்பு மையத்திற்கு வரும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்கள், வேலை நாடுநர்கள், தன்னார்வ பயிலும் வட்ட மாணவ, மாணவிகள் இந்த அலுவலகத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், விவரங்களுக்கு 04142-290039, 9499055908 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.