/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்ட சட்ட பணிகள் ஆணைக் குழு மத்திய சிறையில் திடீர் ஆய்வு
/
மாவட்ட சட்ட பணிகள் ஆணைக் குழு மத்திய சிறையில் திடீர் ஆய்வு
மாவட்ட சட்ட பணிகள் ஆணைக் குழு மத்திய சிறையில் திடீர் ஆய்வு
மாவட்ட சட்ட பணிகள் ஆணைக் குழு மத்திய சிறையில் திடீர் ஆய்வு
ADDED : பிப் 08, 2025 07:02 AM

கடலுார் : மாவட்ட சட்ட பணிகள் ஆணைக் குழு தலைவர் நீதிபதி சுபத்திரா தேவி தலைமையிலான குழுவினர் கடலுாரில் பார்வையாளர்கள் குழுவுடன் இணைந்து கடலுார் மத்திய சிறையில் ஆய்வு மேற்கொண்டனர்.
உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலின்பேரில் நேற்று மாவட்ட முதன்மை நீதிபதி சுபத்திரா தேவி தலைமையில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலர் அன்வர் சதாத், கலெக்டர் சிபி ஆதித்ய செந்தில்குமார் உள்ளிட்ட குழுவினர் கடலுார் மத்திய சிறையில் ஆய்வு நடத்தினர்.
அதில் சிறைவாசிகளுக்கு உணவு, உடை, இருப்பிடம், கழிவறை, மருத்துவ உதவிகள் சரியான முறையில் கிடைக்கின்றதா, ஜாதி ரீதியான பாகுபாடு உள்ளதா, மேலும் யாரேனும் துன்புறுத்தல் தருகிறார்களா, சிறை அதிகாரிகளால் ஏதேனும் பிரச்னை உள்ளதா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் சிறைக்கு வருகை தரும் இலவச சட்ட உதவி வழக்கறிஞர்கள் உதவி செய்கிறார்களா என ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக கேட்டறிந்தனர்.இதில் சிறை வாசிகள் அனைவரும் தங்களுக்கு எவ்வித தொந்தரவும் இல்லை, அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றன என பதிலளித்தனர்.
ஆய்வின்போது ஊரக மருத்துவ பணிகள் துணை இயக்குனர் பொற்கொடி, கூடுதல் எஸ்.பி., உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
ஆய்வு தொடர்பான அறிக்கை தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் உச்சநீதிமன்றத்திற்கு விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.