/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்ட அளவிலான போட்டி ஜான்டூயி பள்ளி சாதனை
/
மாவட்ட அளவிலான போட்டி ஜான்டூயி பள்ளி சாதனை
ADDED : நவ 23, 2024 05:48 AM

பண்ருட்டி : மாவட்ட அளவிலான போட்டியில் பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
மாவட்ட அளவில் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டிகள் நெய்வேலி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. போட்டியில் பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிரவீன்குமார், தேவிப்பிரியா தடகள போட்டியிலும், மாணவர்கள் அன்புசெல்வன், சிவதர்ஷன் சதுரங்க போட்டியிலும் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இறகுபந்து, கேரம், மேசை பந்து, கூடைப் பந்து, வலை கோல்பந்து போட்டியிலும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் வீரதாஸ், முதன்மை முதல்வர் வேலண்டினா லெஸ்லி, முதல்வர் மணிகண்டன் ஆகியோர் பாராட்டினர்.