/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்ட அளவிலான கிரிக்கெட்; காஸ்மா பாலிட்டன் அணி சாம்பியன்
/
மாவட்ட அளவிலான கிரிக்கெட்; காஸ்மா பாலிட்டன் அணி சாம்பியன்
மாவட்ட அளவிலான கிரிக்கெட்; காஸ்மா பாலிட்டன் அணி சாம்பியன்
மாவட்ட அளவிலான கிரிக்கெட்; காஸ்மா பாலிட்டன் அணி சாம்பியன்
ADDED : ஜன 20, 2025 11:56 PM

கடலுார்;
கடலுார் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் காஸ்மா பாலிட்டன் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
கடலுார் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி அண்ணா விளையாட்டரங்கில் கடந்த 12ம் தேதி துவங்கியது. கடலுார், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம், விருத்தாசலம் உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 16 அணிகள் பங்கேற்றன. நேற்று முன்தினம் நடந்த இறுதி போட்டியில் கடலுார் லவ் ஸ்டார் அணியும், கடலுார் காஸ்மா பாலிட்டன் அணியும் மோதின.
இதில், கடலுார் காஸ்மா பாலிட்டன் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. பின், நடந்த பரிசளிப்பு விழாவில், மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர் மாவட்ட விளையாட்டு அதிகாரி மகேஷ்குமார் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் சுதீர்பாபு, தாஜுதீன், சிதம்பரம், பாபு பங்கேற்றனர்.