மாவட்ட ஸ்கேட்டிங் போட்டி: மாணவர்களுக்கு பரிசளிப்பு
மாவட்ட ஸ்கேட்டிங் போட்டி: மாணவர்களுக்கு பரிசளிப்பு
UPDATED : அக் 14, 2026 03:39 PM
ADDED : அக் 14, 2026 03:36 PM
அ நிறம் | அளவு
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடி பிரைம் எஸ்.டி.சீயோன் மெட்ரிக் பள்ளியில் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது.
பூதங்குடி பிரைம் எஸ்.டி.சீயோன் பள்ளியில் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நடந்தது. அதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் சாமுவேல்சுஜின், இணை தாளாளர் தீபா ஆகியோர் பாராட்டி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
ஸ்கேட்டிங் பயிற்சியாளர் நடராஜன் நன்றி கூறினார்.
