ADDED : பிப் 02, 2026 03:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம், எடிசன் சி.பி.எஸ்.இ., பள்ளியில், மூன்றாமாண்டு விளையாட்டு போட்டி நடந்தது. இந்த போட்டியில், மாவட்ட அளவில், 10 க்கும் மேற்பட்ட சி.பி.எஸ்.சி., பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இதில், கால்பந்து போட்டியில் நெய்வேலியை சேர்ந்த ஜவஹர் பள்ளி முதலிடமும், எடிசன் அகோரம் பள்ளி இரண்டாமிமும் பெற்றனர்.
கோ-கோ பெண்களுக்கான போட்டியில் எடிசன் பள்ளி முதலிடமும், நெய்வேலி ஜவஹர் பள்ளி இரண்டாம் இடமும் பெற்றன. அதேபோல், தடகள போட்டியில், அதெனா பள்ளி அதிக புள்ளிகளை பெற்று கோப்பையை வென்றது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு பள்ளி தாளாளர் ஷம்மி ரத்னா பரிசுகள் வழங்கி பாராட்டினார். நிகழ்வில், பள்ளி முதல்வர் கல்யாணி, உடற்பயிற்சி ஆசிரியர்கள் வனிதா, வாசுகி, அபிலாஷ் , அபுதாகிர், டேவிட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

