தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பேரிடர் காலங்களில் பாதிப்பு ஏற்படும் 239 இடங்கள் மாவட்ட கண்காணிப்பாளர் அன்பழகன் தகவல்

 பேரிடர் காலங்களில் பாதிப்பு ஏற்படும் 239 இடங்கள் மாவட்ட கண்காணிப்பாளர் அன்பழகன் தகவல்

 பேரிடர் காலங்களில் பாதிப்பு ஏற்படும் 239 இடங்கள் மாவட்ட கண்காணிப்பாளர் அன்பழகன் தகவல்


ADDED : நவ 29, 2025 05:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 05:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் பாதிப்பிற்குள்ளாகக்கூடிய, பகுதிகளாக 239 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன என்று மாவட்ட கண்காணிப்பாளர் அன்பழகன் கூறினார்.

வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு மாவட்ட கண்காணிப்பாளர் அன்பழகன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் கண்காணிப்பாளர் அன்பழகன் கூறியதாவது:

கடலுார் மாவட்டத்தில் பெண்ணையாறு, கெடிலம், வெள்ளாறு, பரவனாறு, கொள்ளிடம் ஆகிய 5 பெரிய ஆறுகளும், 228 பெரிய ஏரிகளும் உள்ளன.

பேரிடர் கா லங்களில் பாதிப்புக்குள்ளாக கூடிய பகுதிகளாக 239 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள, 28 புயல் பாதுகாப்பு மையங்களில் 8 ஆயிரத்து 400 பேர் தங்கும் அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், 14 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களில், 15 ஆயிரத்து, 800 பேரும், 191 தற்காலிக தங்கும் இடங்களில் 1 லட்சத்து 54 ஆயிரத்து 875 பேரும் தங்கும் அளவிற்கு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பேரிடர் காலங்களில் உரிய அலுவலர்களுக்கு இடையேயான தகவல் தொடர்பினை மேம்படுத்தும் பொருட்டு முக்கிய அலுவலர்களுக்கு 125 எண்ணிக்கையில் வாக்கி-டாக்கி கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

பேரிடர் காலங்களில் உரிய அலுவலர்களுக்கு குறுகிய காலத்திற்குள் செய்தி அளித்திட 35 கம்பியில்லா தொலை தொடர்புகருவிகளும், மாவட்ட பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் செயற்கைக்கோள் தொலைபேசி 2 தயார் நிலையில் உள்ளன.

மழையளவினை கண்டறிய 25 நிலையான மழைமாணிகள், 39 தானியங்கி மழைமாணிகள் மற்றும் 4 தானியங்கி வானிலை மையங்கள் அமைக்கப்பட்டு மாவட்டத்தின் வானிலை நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மழை தொடர்பாக அவசர கட்டுப்பாட்டு அறையினை தொடர்புகொள்வதற்கு 1077 (கட்டணமில்லா எண்) மற்றும் 04142-220700, 290325, 290326, 290327 ஆகிய தொலைபேசி எண்கள் செயல்பட்டு வருகிறது.

தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், 35 பேர் மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புக்குழுவினர் 40 பேர் வருகைபுரிந்துள்ளனர். தேவையான இடங்களில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., புண்ணிய கோட்டி, ஊரக வளர்ச்சி முகமையின் கூடு தல் கலெக்டர் பிரியங்கா, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோடீஸ்வரன், நேர்முக உதவியாளர் (கணக்கு) தீபா, சிதம்பரம் சப் கலெக்டர்கிஷன்குமார் பயிற்சி கலெக்டர் மாலதி உட்பட அனைத்துத் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us