/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் தீபாவளி விழா
/
மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் தீபாவளி விழா
ADDED : அக் 19, 2025 11:52 PM

மந்தாரக்குப்பம்: குறவன்குப்பம் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் தீபாவளி விழா கொண்டாடப்பட்டது.
நெய்வேலியை அடுத்த குறவன் குப்பத்தில் செயல்பட்டு வரும் டிவைன் கிராஸ் மிஷன் மனவளர்ச்சி குன்றியப் பள்ளியில் திபாவளி விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளி தாளாளர் மனநல நிபுணர் சகாயராஜா தலைமை தாங்கினார் நியூ லைட் சாரிட்டபுல் டிரஸ்ட் ராஜாமணி முன்னிலை வகித்தார். ஆசிரியர் கென்னடி அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக நெய்வேலி சோலார் சிட்டி அரிமா சங்க தலைவர் ரமேஷ் மாவட்ட தலைவர் லட்சுமி நாராயணன் பங்கேற்றனர்.
அரிமா சங்க நிர்வாகிகள் ராஜா, உதயகுமார் ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு இனிப்பு மற்றும் பட்டாசுகளை வழங்கினர். மாணவர்களின் சிறப்பு நடனம் மற்றும் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. காப்பாளர் சுரேஷ் நன்றி கூறினார்