/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருதையில் திடீர் மழையால் தீபாவளி விற்பனை பாதிப்பு
/
விருதையில் திடீர் மழையால் தீபாவளி விற்பனை பாதிப்பு
விருதையில் திடீர் மழையால் தீபாவளி விற்பனை பாதிப்பு
விருதையில் திடீர் மழையால் தீபாவளி விற்பனை பாதிப்பு
ADDED : அக் 27, 2024 04:57 AM

விருத்தாசலம் விருத்தாசலம் பகுதியில் நேற்று பெய்த திடீர் மழையால், தீபாவளி விற்பனை பாதித்தது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை, பட்டாசு, இனிப்பு வகைகள் விற்பனை அதிகமாக இருக்கும். விருத்தாசலம் நகரில் கடைவீதி, ஜங்ஷன் ரோடு, கடலுார் ரோடு பகுதிகளில் உள்ள ஜவுளி, ஜூவல்லரி, மளிகை, ஸ்வீட் கடைகளில் வழக்கமாக கூட்டம் அதிகமாக இருக்கும்.
அதன்படி, மாலையில் பள்ளி முடிந்ததும் மாணவர்களை அழைத்து வரும் பொது மக்கள் ஜவுளி, மளிகை, ஸ்வீட் வகைகளை வாங்கிச் சென்றனர். தீபாவளி நெருங்கிய நிலையில் நேற்று காலை முதல் பெய்து வரும் மழையால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் சிரமமடைந்துள்ளனர். மேலும் பட்டாசு, மளிகை பொருட்களை வாங்கிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தீபாவளி விற்பனை பாதித்துள்ளதால் வியாபாரிகள், பொதுமக்கள் சிரமமடைந்தனர்.