/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெய்வேலி தொகுதியில் தி.மு.க., முகவர்கள் கூட்டம்
/
நெய்வேலி தொகுதியில் தி.மு.க., முகவர்கள் கூட்டம்
ADDED : நவ 09, 2024 06:08 AM

நெய்வேலி : நெய்வேலி சட்டசபை தொகுதிக்குட்பட்ட பண்ருட்டி தெற்கு மற்றும் வடக்கு ஒன்றிய பகுதிகளை சேர்ந்த தி.மு.க., பாக நிலை முகவர்கள் கலந்தாய்வுக் கூட்டம், முத்தாண்டிக்குப்பத்தில் நடந்தது.
சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். நெய்வேலி தொகுதி பார்வையாளர் இளையராஜா பங்கேற்று பேசினார்.
கூட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை முகாமில் கலந்து கொண்டு, சேர்க்கை, நீக்கம், திருத்தம் உள்ளிட்ட பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என, முகவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது கூட்டத்தில் பண்ருட்டி ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், மாவட்ட கவுன்சிலர் ஜெகநாதன், ஒன்றிய கவுன்சிலர் ஞானசேகர், பொதுக்குழு உறுப்பினர் அறிவழகன், ஒன்றிய பொருளாளர் ராஜசேகரன், தகவல் தொழில்நுட்ப அணி சத்தியா மற்றும் பாக நிலை முகவர்கள் கலந்து கொண்டனர்.