/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நகர செயலாளர்கள் பதவி காலி தி.மு.க., - அ.தி.மு.க.,வில் சுணக்கம்
/
நகர செயலாளர்கள் பதவி காலி தி.மு.க., - அ.தி.மு.க.,வில் சுணக்கம்
நகர செயலாளர்கள் பதவி காலி தி.மு.க., - அ.தி.மு.க.,வில் சுணக்கம்
நகர செயலாளர்கள் பதவி காலி தி.மு.க., - அ.தி.மு.க.,வில் சுணக்கம்
ADDED : ஆக 20, 2025 07:01 AM
ப ரங்கிப்பேட்டையில் நகர தி.மு.க., செயலாளராக இருந்த, முனவர் உசேன் கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, நகர செயலாளர் பதவிக்கு இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை.
அதே போன்று, அ.தி.மு.க., நகர செயலாளராக இருந்த, மாரிமுத்து, உடல் நலக்குறைவால் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு இறந்தார். அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., நகர செயலாளர் பதவிக்கும் யாரும் நியமிக்கப்படவில்லை.
தி.மு.க., -அ.தி.மு.க., கட்சிகளில் மாவட்டம், ஒன்றிய மற்றும் நகர செயலாளர் பதவிகள் முக்கிய பதவியாகும். கட்சி தலைமை கூறும் பணிகளை, நிர்வாகிகளுடன் இணைந்து நிறைவேற்றுவது, கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைந்து செல்வது நகர செயலாளர்களின் பணியாகும்.
அப்படிப்பட்ட நகர செயலாளர் பதவி இந்த இரு கட்சிகளிலும் நியமிக்கப்படாமல் உள்ளதால், நிர்வாகிகளிடையே கட்சிப் பணி மேற்கொள்வதில் சுணக்கம் ஏற்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், நகர செயலாளர்கள் நியமிக்கப்படாமல் இருப்பது தொண்டர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.