தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தி.மு.க., கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

 தி.மு.க., கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

 தி.மு.க., கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 16, 2026 04:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2026 04:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

-நமது நிருபர்-: கடலுார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, மத்திய அரசை கண்டித்து தி.மு.க., கூட்டணி கட்சியினரின் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

பரங்கிப்பேட்டை பேரூராட்சி சேர்மன் தேன்மொழி சங்கர் தலைமை தாங்கினார். துணை சேர் மன் முகமது யூனுஸ், முன்னாள் துணை சேர்மன் செழியன், முன்னாள் நகர செயலாளர் உசேன் முன்னிலை வகித்தனர். தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர். முன்னாள் நகர செயலாளர் பாண்டியன், கவுன்சிலர்கள் ஆனந்தன், கணேசமூர்த்தி, காங்., அபுபக்கர், மா.கம்யூ., வேல்முருகன், தே.மு.தி.க., சரவணன், வி.சி.க., அண்ணாமலை, இந்திய யூனியன் முஸ்லீ ம் லீக் ஷேக் ஆதம், எஸ்.டி.பி.ஐ., முகமது செய்யது உட்பட பலர் பங்கேற்றனர்.

பு.முட்லுார் பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் முத்துப்பெருமாள் தலைமை தாங்கினார். பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் மனோகர், தெற்கு ஒன்றிய செயலாளர் கலையரசன், மா.கம்யூ., மாநிலக்குழு ரமேஷ்பாபு முன்னிலை வகித்தனர். தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய அவைத் தலைவர் ராஜாராமன், மா.கம்யூ., ஆழ்வாழ்வார் வி.சி.க., செல்வமணி, இந்திய கம்யூ., குலோப் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

சிறுபாக்கம் மங்களூர் தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலர் செங்குட்டுவன் தலைமை தாங்கினார். தி.மு.க., நிர்வாகிகள் திருவள்ளுவன், சேகர், குமணன் உட்பட பலர் பங்கேற்றனர். அதேபோல், சிறுபாக்கம் அடுத்த அடரி கிராமத்தில் மங்களூர் தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலர் சின்னசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

வேப்பூர் நல்லுார் தி.மு.க., ஒன்றிய செயலர் பா வாடை கோவிந்தசாமி தலைமை தாங்கினார். வி.சி., மாவட்ட செயலர் திராவிடமணி, கம்யூ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், தே.மு.தி.க., மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார், வி.சி., ஒன்றிய செயலர் சந்தோஷ், தி.மு.க., நிர்வாகிகள் மாரிமுத்தாள் குணா, வெங்கடாசலம், பாபு, குணா, அரிசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

புவனகிரி ஒன்றிய செயலாளர் மதியழகன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ஜெய் வரவேற்றார். மத்திய ஒன்றிய செயலாளர் வெற்றிவேல், மேற்கு ஒன்றிய செயலாளர் சின்னமதி, ம.தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் ரவி, வி.சி.க., மாவட்ட செயலாளர் தமிழொ ளி, தே.மு.தி.க., மாவட்ட துணை செயலாளர் பானுச்சந்தர் , மா.கம்யூ ஒன்றிய செயலாளர் காளி கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர். காங்., மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில்வேலன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார். காங்., மாவட்ட துணைத்தலைவர் விநாயகம், புவனகிரி நகர பொறுப்பாள ர் முத்து, முன்னாள் காங்.,நகர தலைவர் கண்ணன் உள்ளிட்ட ப லர் பங்கேற்றனர். திமுக., தொழில்நுட்ப பிரிவு அருண் நன்றி கூறினார்.

கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் சபா தலைமை தாங்கினார். மத்திய ஒன்றிய செயலாளர் பாலு வரவேற்றார்.காங்., கட்சியின் வட்டாரத் தலைவர் செழியன், த.வா.க., மாவட்ட செயலாளர் சேரலாதன், வி.சி.க., அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., சரவணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார். ஒன்றிய செயலாளர் திருமூர்த்தி நன்றி கூறினார்.

நெல்லிக்குப்பம் நெல்லிக்குப்பத்தில் நடந்த ஆர்ப்பா ட்டத்தில், தி.மு.க., நகர செயலாளர் மணிவண்ணன்,சேர்மன் ஜெயந்தி தலைமையில் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

பண்ருட்டி நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். மேற்கு மாவட்ட அவைத் தலைவர் நந்தகோபாலகிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர்கள் தணிகை செல்வம், ஆனந்திசரவ ணன், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் கதிர்காமன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் குணசேகரன், துணை சேர்மன் சிவா முன்னிலை வகித்தனர்.

ஸ்ரீமுஷ்ணம்

ஸ்ரீமுஷ்ணத்தில் என்.டி.ஏ. கூட்டணியை கண்டித்து தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தி.மு.க. ஒன்றிய செயலாளர் தங்க ஆனந்தன் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தராஜன், செந்தில்குமார், காங். முன்னாள் மாவட்ட தலைவர் செந்தில்நாதன்,தே.மு.தி.க., வி.சி.க., உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திட்டக்குடி அதேபோல, திட்டக்குடியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, நகர செயலாளர் பரமகுரு தலைமை தாங்கினார். கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர். இதேபோன்று, ஆவினங்குடியில் மங்களூர் ஒன்றிய செயலாளர் அமிர்தலிங்கம் தலைமையிலும், பெண்ணாடத்தில் நகர செயலாளர் குமரவேல் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

காட்டுமன்னார்கோவில் மேலும், காட்டுமன்னார்கோவிலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க., ஒன்றிய செயலாளர் முத்துசாமி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஜெயபாண்டியன், நகர செயலாளர் கணேசமூர்த்தி, கவுன்சிலர் அறிவழகன், இளைஞர் அணி விஜயராகவன், காங்., மணிமொழி, ஜாகீர்உசேன், தே.மு.தி.க., அர்சுணன், வி.சி.க., மாவட்ட செயலாளர் மணவாளன், கம்யூ., கட்சி தேன்மொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us