/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் பஸ் நிலையத்திற்கு எதிர்ப்பு தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

ADDED : மார் 27, 2025 04:25 AM
கடலுார்: எம்.புதுாரில் புதிய பஸ் நிலையம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து கடலுாரில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன.
கடலுார் மாநகர புதிய பஸ் நிலையம் எம்.புதுாரில் அமைக்க, ஆதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதிய பஸ் நிலையத்தை நகரின் மையப் பகுதியில் அமைக்க வலியுத்தியும், அரசு போக்குவரத்து கழக பணிமனையை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு, பஸ் நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, தி.மு.க., கூட்டணி கட்சிகள் இன்று கடலுாரில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
கூட்டணியில் உள்ள காங்.,- மா.கம்யூ.,- இந்திய.கம்யூ.,- வி.சி., - ம.தி.மு.க., -இந்தியன் முஸ்லீம் லீக், மக்கள் நீதி மையம், மனித நேய மக்கள் கட்சி போன்ற கூட்டணி கட்சிகள் பங்கேற்கின்றன.
புதிய கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. அரசு கொண்டு வரும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் கட்சியுடன் கூட்டணியில் உள்ள கூட்டணி கட்சியினர் எதிராக போராட்டம் நடத்துவது கடலுார் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.