ADDED : ஜன 06, 2026 03:46 AM

அ நிறம் | அளவு
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையத்தில் தி.மு.க., சார்பில், என் ஓட்டுச்சாவடி, வெற்றி ஓட்டுச்சாவடிக்கான ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணியன், காசிராஜன், ஒன்றிய துணை செயலாளர் ராஜேந்திரன், அவைத்தலைவர் சாரங்கபாணி, பொதுக்குழு உறுப்பினர் ஞானசேகரன், மாவட்ட விவசாய சங்க தலைவர் வைத்திலிங்கம் முன்னிலை வகித்தனர்.
வேளாண்துறை அமைச்சர் பன்னீர் செல்வம் தலைமை தாங்கி பேசினார். பாக முகவர்கள், பாக பொறுப்பாளர்கள், கிளை செயலாளர்கள், மகளிர் அணியினர் வரும் சட்டசபை தேர்தலுக்கு முன் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கபட்டது.
மாவட்ட பிரதிநிதி ஞானசேகரன், தொகுதி பொறுப்பாளர் சின்னமணி, புவனகிரி ஒன்றிய செயலாளர் மதியழகன், காட்டுமன்னார்கோவில் பாஸ்கர், கடலுார் ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி பாண்டுரங்கன் உட்பட பலர் பங்கேற்றனர்.
