தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தி.மு.க.,வேட்பாளர் பன்னீர்செல்வம் ஓட்டு  சேகரிப்பு 

 தி.மு.க.,வேட்பாளர் பன்னீர்செல்வம் ஓட்டு  சேகரிப்பு 

 தி.மு.க.,வேட்பாளர் பன்னீர்செல்வம் ஓட்டு  சேகரிப்பு 


ADDED : ஏப் 16, 2026 10:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2026 10:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு பகுதியில் தி.மு.க.,வேட்பாளர் பன்னீர்செல்வம் ஓட்டு சேகரித்தார்.

குறிஞ்சிப்பாடி தொகுதியின் தி.மு.க.,வேட்பாளரான பன்னீர்செல்வம் நேற்று காலை கடலுார் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஓட்டு சேகரித்தார்.

அவர் தேர்தலில் இந்த பகுதியில் ஓட்டு சேகரிக்கும் போது, சி.என்.பாளையம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பூஜை செய்வது வழக்கம். அதனடிப்படையில் நேற்று காலை கோவிலில் பூஜை செய்து, ஓட்டு சேகரித்தார். தொடர்ந்து, சி.என்.பாளையம், நடுவீரப்பட்டு, குமளங்குளம், விலங்கல்பட்டு, வானமாதேவி, திருமாணிக்குழி, எம்.புதுார், திருவந்திபுரம், கே.என்.பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் ஓட்டு சேகரித்தார்.

அப்போது பன்னீர் செல்வம் பேசியதாவது:

இப்பகுதிகளில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கப்பட்டு விவசாயிகள் தங்களது நிலத்தில் விளையும் நெல்களை நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர்.

மேலும் புதியதாக பல சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பல புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டு, குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல பதப்படுத்தும் கிடங்குகள் கட்டப்பட்டு வருகின்றன.

இதுபோன்ற பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us