ADDED : ஏப் 16, 2026 06:04 PM

பரங்கிப்பேட்டை: புவனகிரி அருகே, தி.மு.க., வேட்பாளர் சரவணன், ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
புவனகிரி தொகுதிக்குட்பட்ட மத்திய ஒன்றிய பகுதிகளில் நேற்று தி.மு.க., வேட்பாளர் சரவணன், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் திறந்த வெளி வேனில் சென்று ஓட்டு சேகரித்தார். அப்போது, பூதவராயன்பேட்டை கிராமத்தில் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து அவருக்கு வரவேற்பு கொடுத்தனர்.
அவருடன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் வெற்றிவேல், புவனகிரி சட்டசபை தொகுதி பொறுப்பாளர் சிவா, முன்னாள் எம்.எல்.ஏ., மல்லிகா, காங்., வட்டார தலைவர் அருள்ஜோதி, வி.சி.க., மண்டல பொறுப்பாளர் செல்லப்பன், தொகுதி பொறுப்பாளர் சுதாகர், துணை பொறுப்பாளர் கதிரவன், ம.தி.மு.க., மாநில செயற்குழு ரவி, தே.மு.தி.க., தொகுதி பொறுப்பாளர் பானுசந்தர், மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் காளி கோவிந்தராசு மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
