தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தி.மு.க., வேட்பாளர் சரவணன் ஓட்டு சேகரிப்பு

 தி.மு.க., வேட்பாளர் சரவணன் ஓட்டு சேகரிப்பு

 தி.மு.க., வேட்பாளர் சரவணன் ஓட்டு சேகரிப்பு


ADDED : ஏப் 18, 2026 10:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 18, 2026 10:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பரங்கிப்பேட்டை: புவனகிரி தொகுதி கம்மாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட வெளிக்கூனங்குறிச்சி, ரேமாபுரி, வேப்பங்குறிச்சி, பழைய நெய்வேலி, பெரியாக்குறிச்சி, கீழ்பாதி உட்பட 18 கிராமங்களில் தி.மு.க., வேட்பாளர் சரவணன், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் திறந்தவெளி வேனில் சென்று ஓட்டு சேகரித்தார். வீணங்கேணி கிராமத்தில், அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர். தி.மு.க., அரசு பெண்களுக்கு செய்துள்ள நலத்திட்டங்கள், சாதனைகளை எடுத்துக்கூறி மீண்டும் ஆட்சி தொடர்ந்திட உதயசூரியன் சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும் எனக்கேட்டு கொண்டார்.

அவருடன், கம்மாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் திருமாவளவன், வி.சி.க., மாவட்ட செயலாளர் அரங்க தமிழ்ஒளி, காங்., வட்டார தலைவர் ராமகிருஷ்ணன், ம.தி.மு.க., மாநில செயற்குழு ரவி, தே.மு.தி.க., தொகுதி பொறுப்பாளர் பானுசந்தர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us