ADDED : ஏப் 09, 2026 10:05 PM

அ நிறம் | அளவு
பரங்கிப்பேட்டை: புவனகிரி தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
புவனகிரி தொகுதிக்குட்பட்ட, பின்னலுார், கரைமேடு, குப்பம், ஆணைவாரி, துறிச்சிக்கொல்லை, நெல்லுக்கொள்ளை, எறும்பூர் உட்பட, 20க்கும் மேற்பட்ட கிராமங்களில், தி.மு.க., வேட்பாளர் சரவணன், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று ஓட்டு சேகரித்தார். அவருடன், ஒன்றிய செயலாளர் மதியழகன், ஒன்றிய துணை செயலாளர் செல்வராசு, மாவட்ட பிரதிநிதி பிரியன், துணை சேர்மன் கருணாநிதி, வி.சி.க., மாவட்ட செயலாளர் அரங்க தமிழ் ஒளி, காங்., வட்டார தலைவர் ஜெயசீலன், தே.மு.தி.க., ஒன்றிய செயலாளர் பாலு, நிர்வாகிகள் சத்தியா, தேவயானி, கல்பனா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
