ADDED : ஏப் 10, 2026 11:25 PM

அ நிறம் | அளவு
பரங்கிப்பேட்டை: கீரப்பாளையம் ஒன்றிய பகுதிகளில் புவனகிரி தொகுதி தி.மு.க., வேட்பாளர் ஓட்டு சேகரித்தார்.
கீரப்பாளையம் மத்திய ஒன்றியத்திற்குட்பட்ட கண்ணங்குடி, வாள்காரமேடு, வீரசோழகன், ஆடூர், பூங்குடி, பண்ணப்பட்டு, சிறுகாளுர், சேதியூர், நெடுஞ்சேரி, பெருங்காளுர் உட்பட 21 கிராமங்களில் நேற்று புவனகிரி தொகுதி தி.மு.க., வேட்பாளர் சரவணன், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் திறந்தவெளி வேனில் ஒவ்வொரு பகுதியாக சென்று ஓட்டு சேகரித்தார்.
அவருடன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் பாலு, வி.சி., கட்சி, மாவட்ட செயலாளர் அரங்க தமிழ் ஒளி, காங்., வட்டார தலைவர் செழியன், மா.கம்யூ., மாவட்டக்குழு வாஞ்சிநாதன், தே.மு.தி.க., புவனகிரி தொகுதி பொறுப்பாளர் பானுசந்தர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
