ADDED : ஏப் 15, 2026 10:40 PM

பரங்கிப்பேட்டை: புவனகிரி தொகுதிக்குட்பட்ட கம்மாபுரம் ஒன்றியத்தில் உள்ள கோ.பொன்னேரி, கார்குடல், கோ மாவிடந்தல், கோ ஆதனுார், குமாரமங்கலம், புதுார், கம்மாபுரம் மெயின்ரோடு உட்பட, 15 கிராமங்களில் நேற்று புவனகிரி தொகுதி தி.மு.க., வேட்பாளர் சரவணன், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் திறந்தவெளி வேனில் சென்று ஓட்டு சேகரித்தார்.அப்போது, பொதுமக்கள் அவருக்கு சால்வை மற்றும் மாலை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர்.
அப்போது அவர் மக்களிடம், தி.மு.க., அரசின் மக்கள் நலத்திட்டங்கள் தொடரவும், ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வருவதற்கும், உதயசூரியன் சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும், என பேசினார்.
அவருடன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராயர், வி.சி.க., மாவட்ட செயலாளர் அரங்க தமிழ்ஒளி, தே.மு.தி.க., தொகுதி பொறுப்பாளர் பானுசந்தர், மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் கலைச்செல்வன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
