/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
துணை முதல்வராக உதயநிதி பதவி ஏற்பு நெய்வேலியில் தி.மு.க., கொண்டாட்டம்

ADDED : செப் 30, 2024 06:06 AM

நெய்வேலி: அமைச்சர் உதயநிதி, தமிழகத்தின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டதை வரவேற்று நெய்வேலியில் தி.மு.க.,வினர் கொண்டாடினர்.
சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., அறிவுறுத்தலின் பேரில், நெய்வேலி டவுன்ஷிப் மெயின் பஜார் மற்றும் நெய்வேலி ஆர்ச் கேட் எதிரில் பண்ருட்டி ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன் தலைமையில் தி.மு.க., நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
மாவட்ட பொருளாளர் தண்டபாணி, நெய்வேலி நகர செயலாளர் குருநாதன், ஒன்றிய செயலாளர் குணசேகரன், தொ.மு.ச., தலைமை நிர்வாகிகள் திருமாவளவன், பாரி, அய்யப்பன், ஜெரால்டு, தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் புகழேந்தி, அவை தலைவர்கள் வீர ராமச்சந்திரன், நன்மாற பாண்டியன், பொருளாளர் ஆனந்த ஜோதி, ஒன்றிய துணை செயலாளர் ஏழுமலை, வடக்குத்து ஊராட்சி துணை தலைவர் சடையப்பன், நகர துணை செயலாளர் கோமதி செந்தில் குமார், செந்தமிழ்ச்செல்வன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ராஜேஷ், சதாம், நிர்வாகிகள் சுப்ரமணியன், வாஜித், பிச்சையா, அந்தோணி தாஸ், கோபால், நடராஜன், மணிகண்டன், இளைஞரணி நிர்வாகிகள் பாக்கியராஜ், கோபு உட்பட பலர் பங்கேற்றனர்.