ADDED : மார் 29, 2026 10:35 PM

அ நிறம் | அளவு
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த சேந்திரக்கிள்ளை கிராமத்தில் நேற்று வடக்கு ஒன்றிய தி.மு.க., கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் முத்துப்பெருமாள் தலைமை தாங்கினார். வி.சி.க., மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், காங்., வட்டார தலைவர் ரவிச்சந்திரன், மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் விஜய் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், சிதம்பரம் தொகுதி தி.மு.க., கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் தமிமுன் அன்சாரியின் வெற்றிக்கு அனைத்து கட்சி நிர்வாகிகளும் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதில், மாவட்ட துணை செயலாளர் சக்திவேல், மண்டல துணை செயலாளர் செல்வமணி, ஒன்றிய செயற்குழு ஜெயசீலன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
