
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த விளாங்காட்டூர் கிராமத்தில், தி.மு.க., வடக்கு ஒன்றியம் சார்பில்,என் ஓட்டுச்சாவடி; வெற்றி ஓட்டுச்சாவடி பிரசார கூட்டம் நடந்தது.
ஒன்றிய செயலாளர் கனக கோவிந்தசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய துணை செயலாளர் தர்ம மணிவேல்முன்னிலைவகித்தார். மாநில இலக்கிய அணி துணை செயலர் கலைச்செல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சட்டசபை தேர்தல் பணி தொடர்பாக பேசினார்.
மாவட்ட பிரதிநிதி சிவக்குமார், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் வாஞ்சிநாதன், வீரபாண்டியன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஜெகதீஸ்வரன், லோகநாதன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சேகர், முன்னாள் ஊராட்சி தலைவர் சுப்ரமணியன், கிளை செயலாளர் வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

