ADDED : மார் 15, 2026 03:46 AM

நெய்வேலி: நெய்வேலி சட்டசபை தொகுதிக்குட்பட்ட தி.மு.க,வின் அனைத்து பகுதிகளின் கட்சி நிர்வாகிகள், பாக நிலை முகவர்கள், பூத் டிஜிட்டல் ஏஜென்ட் நிர்வாகிகள் பங்கேற்ற தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
நெய்வேலி ஆர்ச்கேட் அருகே, தனியார் திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், ' நெய்வேலி தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் வளர்ச்சி பணிகள், மக்கள் நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.கிராமங்கள் தோறும் நிர்வாகிகள் முதல்வர் செய்த சாதனைகளை பட்டியலிட வேண்டும். தேர்தல் பணிகளை சுறுசுறுப்புடன் மேற்கொள்ள வேண்டும்,' என்றார். கூட்டத்தில், 'தமிழ்நாடு வெல்லட்டும் ஸ்டாலின் தொடரட்டும்' என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது.
நிகழ்ச்சியில், நெய்வேலி நகர தி.மு.க., செயலாளர் குருநாதன், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், பண்ருட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ் குமார், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அறிவழகன், ஒன்றிய அவைத் தலைவர்கள் ராஜா, வீரராமச்சந்திரன், நன்மாறபாண்டியன், ஒன்றிய பொருளாளர்கள் ஐயப்பன், ஆனந்தஜோதி, சக்கரபாணி, மதியழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
