/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க., பவள விழா நலத்திட்ட உதவி வழங்கல்
/
தி.மு.க., பவள விழா நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : அக் 03, 2024 11:16 PM

நெய்வேலி: நெய்வேலி தொகுதிக்குட்பட்ட கீழிருப்பு கிராமத்தில் நடந்த தி.மு.க., பவள விழாவில், சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., கட்சி கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
நெய்வேலி தொகுதி முழுவதும் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தலைமையில் தி.மு.க.,வின் பவள விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கீழிருப்பு கிராமத்தில் நடந்த விழாவில் கட்சிக்கொடியேற்றி வைத்து, மகளிர் குழுவை சேர்ந்த 61 பெண்களுக்கு ரூ. 36 லட்சம் மதிப்படைய முந்திரிக்கொட்டை உடைக்கும் நவீன இயந்திரங்களை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள உதயநிதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
நெய்வேலி பகுதியில் முந்திரி கொட்டை உடைக்கும் நவீன இயந்திரங்கள் அரச சார்பில், மானியத்துடன் வழங்கபட்டுள்ளது. தமிழக அரசின் திட்டங்களை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்தி வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்றார்.
விழாவில் தோட்டக்கலை அலுவலர் மார்க்கண்டேயன், உதவி தோட்டக்கலை அலுவலர் அடைக்கலசாமி, தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் ஜெகநாதன், ஊராட்சி செயலர் ஜோதிலிங்கம், த.வா.க., நிர்வாகி சிவக்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் தேவராஜ், ஞானசேகர், தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் அறிவழகன், ஒன்றிய குழு துணைத் தலைவர் ஆடல் அரசு, செல்வகுமார், லோகநாதன், கீழிருப்பு பரிசன், செல்வராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.