ADDED : ஜன 06, 2026 03:34 AM
அ நிறம் | அளவு
குறிஞ்சிப்பாடி: தி.மு.க., கவுன்சிலர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குறிஞ்சிப்பாடி பேரூராட்சி, அயன் குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்தவர் ரத்தினசாமி மகன் ராஜ்குமார், 40; குறிஞ்சிப்பாடி பேரூராட்சி, 14வது வார்டு தி.மு.க., கவுன்சிலர். இவரது மனைவி கனிமொழி குறிஞ்சிப்பாடி பேரூராட்சி கண்காணிப்பாளர்.
இந்நிலையில், குடும்ப பிரச்னை காரணமாக நேற்று முன்தினம் கவுன்சிலர் ராஜ்குமார், அப்பகுதி சுடுகாட்டு பாதையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த புகாரின் பேரில், குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
