/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் மாநகராட்சியை கண்டித்து உண்ணாவிரதம் கமிஷனரிடம் தி.மு.க., கவுன்சிலர்கள் மனு

ADDED : ஜன 30, 2024 06:41 AM

கடலுார் : கடலுார் மாநகராட்சி கமிஷனர் காந்திராஜிடம், தி.மு.க., கவுன்சிலர்கள் கீதா குணசேகரன், பிரகாஷ், தமிழரசன், சரத் தினகரன், சுமதி ரங்கநாதன், மகேஸ்வரி விஜயகுமார், ராதிகா பிரேம்குமார், கர்ணன், பாரூக் அலி, கீர்த்தனா ஆறுமுகம் ஆகியோர் கொடுத்துள்ள மனு;
மாநகராட்சி் தேர்தலில் ஏற்பட்ட மனவருத்தம் காரணமாக, எங்களது வார்டுகளுக்கு எவ்வித அடிப்படை வசதியும் செய்து தர மறுப்பதோடு, எங்களை அவமானப்படுத்துகிறார்கள்.
எனவே, மனஉளைச்சலின் காரணமாக எங்களின் நிலைமையை தி.மு.க., தலைமைக்கு தெரியப்படுத்தும் விதமாக நாளை (31ம் தேதி) காலை 8:00 மணியளவில் மாநகராட்சி அலுவலக காந்தி சிலை முன்பு, அடையாள உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம். அதற்கு, அனுமதி வழங்க வேண்டும் என, தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, போராட்டத்தை வாபஸ் பெற்றதாக, மனு கொடுத்த கவுன்சிலர்கள் அறிவித்துள்ளனர்.