/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க., செயற்குழு கூட்டம் அமைச்சர் கணேசன் பங்கேற்பு
/
தி.மு.க., செயற்குழு கூட்டம் அமைச்சர் கணேசன் பங்கேற்பு
தி.மு.க., செயற்குழு கூட்டம் அமைச்சர் கணேசன் பங்கேற்பு
தி.மு.க., செயற்குழு கூட்டம் அமைச்சர் கணேசன் பங்கேற்பு
ADDED : அக் 26, 2024 06:48 AM

நெய்வேலி: நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 25ல் உள்ள தொ.மு.ச., அலுவலகத்தில் தி.மு.க., கடலுார் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் நந்தகோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் அமைச்சர் கணேசன் பங்கேற்று பேசுகையில், 'வரும் நவ., 27ம் தேதி துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளையொட்டி, மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் ஒன்றிய, நகரம் என அனைத்து பகுதிகளிலும், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம், மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்க வேண்டும்; விளையாட்டுப் போட்டிகள் நடத்த வேண்டும்.
வரும் 2026 சட்டசபை தேர்தலில் 200 தொகுதிக்கு மேல் வெற்றி பெற களப்பணி ஆற்ற வேண்டும்' என்றார்.
கூட்டத்தில் பண்ருட்டி ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், தி.மு.க., பொதுக்குழ உறுப்பினர் புகழேந்தி, என்.எல்.சி., தொ.மு.ச., தலைமை நிர்வாகிகள் திருமாவளவன், பாரி, அய்யப்பன், ஜெரால்டு, முன்னாள் எம்.எல்.ஏ., கலைச்செல்வன், நெய்வேலி நகர செயலாளர் குருநாதன், தலைவர் நன்மாறபாண்டியன், கடலுார் மேற்கு மாவட்ட தொகுதி பெறுப்பாளர்கள் இளையராஜா, சந்திரசேகர், ரமேஷ், புஷ்பராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜேஷ், பிரதிநிதி ரவிச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.