ADDED : நவ 18, 2025 06:44 AM

பண்ருட்டி: பண்ருட்டி நகர தி.மு.க., செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது.
பண்ருட்டி நகர தி.மு.க., செயற்குழு கூட்டம், தட்டாஞ்சாவடி கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் தணிகை செல்வம் , ஆனந்தி சரவணன், அவைத் தலைவர் ராஜா, நகர பொருளாளர் ராமலிங்கம், நகர துணை செயலாளர் கவுரிஅன்பழகன், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் பரணிசந்தர், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் சங்கர், தொகுதி தகவல் தொழில்நுட்பணி நாராயணன், சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் லோகநாதன், கவுன்சிலர்கள் ரமேஷ், சோழன், சாந்திசெந்தில், லாவண்யா முத்துவேல், அருள், கலைவாணி மதியழகன்,நகர இளைஞரணி அமைப்பாளர் சம்பத், மாணவரணி அமைப்பாளர் பார்த்திபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் வரும் 27ம் தேதி உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு இருசக்கர வாகன ஊர்வலமாக புறப்பட்டு 33 வார்டுகளில் கட்சி கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்குவது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

