/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம் அமைச்சர் - எம்.எல்.ஏ., அழைப்பு
/
தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம் அமைச்சர் - எம்.எல்.ஏ., அழைப்பு
தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம் அமைச்சர் - எம்.எல்.ஏ., அழைப்பு
தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம் அமைச்சர் - எம்.எல்.ஏ., அழைப்பு
ADDED : பிப் 16, 2025 03:07 AM
நெய்வேலி : திட்டக்குடி மற்றும் நெய்வேலியில் இன்று நடைபெறும் தி.மு.க., பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியினர் திரளாக பங்கேற்க அமைச்சர் கணேசன், சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., அழைப்பு விடுத்துள்ளனர்.
அவர்களது அறிக்கை:
முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உத்தரவின்படி, திட்டக்குடி மற்றும் நெய்வேலி சட்டசபைத் தொகுதிகளில் தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம் இன்று 16ம் தேதி நடக்கிறது. திட்டக்குடியில் ஸ்வர்ணம் ஆறுமுகம் திருமண மண்டபத்தில் காலை 10:00 மணியளவிலும், நெய்வேலியில் மாலை 4:00 மணியளவில் வட்டம் 25ல் என்.எல்.சி., தொ.மு.ச., அலுவலகத்திலும் நடக்கிறது.
கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது, வரும் 21 மற்றும் 22ம் தேதிகளில் கடலுார் மாவட்டத்திற்கு வரும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
மேலும், நெய்வேலியில் 5000க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர், தி.மு.க.,வில் இணையும் நிகழ்ச்சி குறித்த முக்கிய ஆலோசனையும் நடைபெற உள்ளது.
அதுசமயம் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, பேரூராட்சி ஒன்றிய செயலாளர்கள் மற்றும் அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் உட்பட கட்சியினர் அனைவரும் தவறாமல் பங்கேற்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.