தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மகளிர் திட்டங்களுக்கு தி.மு.க., மூடுவிழா நடத்தியது: அருண்மொழிதேவன் 'அட்டாக்'

 மகளிர் திட்டங்களுக்கு தி.மு.க., மூடுவிழா நடத்தியது: அருண்மொழிதேவன் 'அட்டாக்'

 மகளிர் திட்டங்களுக்கு தி.மு.க., மூடுவிழா நடத்தியது: அருண்மொழிதேவன் 'அட்டாக்'


ADDED : ஏப் 09, 2026 10:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2026 10:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பரங்கிப்பேட்டை: புவனகிரி தொகுதிக்குட்பட்ட சித்தேரி, மேலமணக்குடி, சாத்தப்பாடி, வடக்குத்திட்டை, தெற்குதிட்டை, ஆலம்பாடி, கிருஷ்ணாபுரம் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில், அ.தி.மு.க., வேட்பாளர் அருண்மொழிதேவன், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று ஓட்டு சேகரித்தார். அப்போது, அவர் பேசியதாவது:

பொதுமக்களின் விருப்பங்களை நிறைவேற்றிக்கொடுத்தவர் முன்னாள் முதல்வர் பழனிசாமி. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து எல்லா வரிகளையும் உயர்த்தினார். மின்சார கட்டணத்தை உயர்த்தி, ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு பாதிப்புகளை இந்த அரசு செய்து கொண்டிருக்கிறது. அ.தி.மு.க., ஆட்சியில் மகளிருக்கு கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு தி.மு.க., அரசு முடுவிழா நடத்திவிட்டது. கடந்த தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்த தேர்தல் அறிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடு தமிழ்நாடு.

இவ்வாறு, அவர் பேசினார்.

அவருடன், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமா மகேஸ்வரன், ஜெ., பேரவை மாநில துணை செயலாளர் பாலமுருகன், ஒன்றிய செயலாளர் சீனிவாசன், ஜெயசீலன், முன்னாள் ஒன்றிய ஜெ., பேரவை செயலாளர் செந்தில்முருகன், த.மா.கா., கலைவாணன், பழனி, பா.ஜ., வெற்றிவேல், வைத்தியலிங்கம் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சங்கர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us