தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தி.மு.க., ஹாட்பாக்ஸ் வழங்கல்

 தி.மு.க., ஹாட்பாக்ஸ் வழங்கல்

 தி.மு.க., ஹாட்பாக்ஸ் வழங்கல்


ADDED : பிப் 08, 2026 03:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2026 03:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: கம்மாபுரம் தெற்கு ஒன்றிய ஊராட்சிகளில் தி.மு.க., சார்பில் கிராம மக்களுக்கு ஹாட்பாக்ஸ் வழங்கப்பட்டன.

வரும், சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், வாக்காளர்களை கவரும் வகையில் பரிசு பொருட்களை வாரி வழங்கி வருகின்றனர். புவனகிரி சட்டசபை தொகுதியில் தி.மு.க., சார்பில் கிழக்கு மாவட்ட பொருளாளர் கதிரவன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள், வாக்காளர்களுக்கு கவனிப்பு பலமாக நடந்து வருகிறது. அதன்படி, கம்மாபுரம் ஒன்றியம், கார்குடல் ஊராட்சியில் நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய செயலாளர் ராயர் தலைமை தாங்கினார்.

மாவட்ட பொருளாளர் கதிரவன், கிராம மக்களுக்கு ஹாட்பாக்ஸ் வழங்கி, தி.மு.க., மீண்டும் ஆட்சியமைக்க ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். வர்த்தக அணி ரங்கநாதன், முன்னாள் ஊராட்சித் தலைவர் விங்கிடேசன், கிளை செயலாளர் ராஜவன்னியன், நிர்வாகிகள் குணசேகரன், கிருஷ்ணமூர்த்தி, சாருஹாசன், சிலம்பரசன், தட்சிணாமூர்த்தி உடனிருந்தனர்.

தொடர்ந்து, கம்மாபுரம், வி.குமாரமங்கலம், கோ.மாவிடந்தல், கோ.ஆதனுார், கோபாலபுரம் உட்பட 18 ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்களுக்கும் ஹாட்பாக்ஸ்கள் வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us