/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரேஷன் கடையில் தி.மு.க., கல்வெட்டு அ.தி.மு.க., எதிர்ப்பால் பரபரப்பு
/
ரேஷன் கடையில் தி.மு.க., கல்வெட்டு அ.தி.மு.க., எதிர்ப்பால் பரபரப்பு
ரேஷன் கடையில் தி.மு.க., கல்வெட்டு அ.தி.மு.க., எதிர்ப்பால் பரபரப்பு
ரேஷன் கடையில் தி.மு.க., கல்வெட்டு அ.தி.மு.க., எதிர்ப்பால் பரபரப்பு
ADDED : அக் 05, 2024 04:30 AM

புவனகிரி : புவனகிரி அடுத்த மருதுார் ரேஷன் கடை பழுதடைந்ததால், தொகுதி எம்.எல்.ஏ.,வான அ.தி.மு.க.,வை சேர்ந்த அருண்மொழிதேவன், தனது தொகுதி மேம்பாட்டியில் புதிய கட்டடம் கட்டி சமீபத்தில் திறந்து வைத்தார். அந்த கல்வெட்டில் எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெ., படங்கள் வைத்தனர்.
இந்நிலையில் நேற்று பிற்பகல் தி.மு.க., வினர் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் 'அரசு சின்ன்த்துடன் ரேஷன் கடையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்டது. தனலட்சுமி ஊராட்சி தலைவர், மருதுார் ராமலிங்கம் முன்னாள் எம்.எல்.ஏ., வள்ளலார் பிறந்த நாள் 5.10.2024., என்ற வாசகத்துடன் கல்வெட்டு வைத்தனர்.
தகவலறிந்த அ.தி.மு.க.,வினர் திரண்டு, தி.மு.க.,வினர் வைத்த கல்வெட்டை அகற்றக்கோரினர். அவர்களிடம் மருதுார் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களிடம் தி.மு.க.,வினர், நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என்றனர். இதனால் அதிகாரிகள் செய்வதறியாமல் திரும்பி சென்றனர்.