தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும் :தி.மு.க., நேர்காணலில் வலியுறுத்தல்

 ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும் :தி.மு.க., நேர்காணலில் வலியுறுத்தல்

 ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும் :தி.மு.க., நேர்காணலில் வலியுறுத்தல்


ADDED : மார் 23, 2026 10:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 23, 2026 10:25 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கினாலும் ஒற்றுமையாக பணியாற்றி வெற்றி பெற செய்ய வேண்டும் என தி.மு.க., நேர்காணலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது வருகிறது. நேற்று முன்தினம் கடலுார், விழுப்புரம் மாவட்டங்களில் விருப்பமனு கொடுத்தவர்களுக்கு நேர்காணல் நடந்தது. கடலுார் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்த கடலுார் எம்.எல்.ஏ., அய்யப்பன், அவரது மகன் பிரவீன், பிரகாஷ், சரத், விஜயசுந்தரம், கார்த்திக் உட்பட 10 பேரிடம் நேர்காணல் நடந்தது. முதல்வர் ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு, பாரதி, நேரு உள்ளிட்டோர் நேர்காணல் நடத்தினர்.

அப்போது, நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கூட்டணி கட்சியான காங்., எதிர்த்து போட்டியிட்ட கட்சிக்கும் ஓட்டு எவ்வளவு வித்தியாசம் என கேட்டனர். கடலுாரில் தி.மு.க., போட்டியிட்டாலும் அல்லது கூட்டணி கட்சிக்கு சீட் கொடுத்தாலும் நீங்கள் ஒற்றுமையாக பணியாற்றி வெற்றி பெற செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us