/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெய்வேலியில் தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி கூட்டம்
/
நெய்வேலியில் தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி கூட்டம்
நெய்வேலியில் தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி கூட்டம்
நெய்வேலியில் தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி கூட்டம்
ADDED : அக் 14, 2024 11:16 PM

நெய்வேலி : நெய்வேலியில் தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனை கூட்டம் நடந்தது.
சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நெய்வேலி தொகுதிக்குட்பட்ட தி.மு.க.,வின் தகவல் தொழில்நுட்ப அணிக்கு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி, நெய்வேலி தொகுதி ஒருங்கிணைப்பாளர்களாக ஆனந்த் குமார், சந்தியா, பண்ருட்டி தெற்கு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்களாக பாலகிருஷ்ணன், மோகன், பிரியதர்ஷினி. நெய்வேலி நகர ஒருங்கிணைப்பாளர்களாக சோழன், புகழேந்தி, சுதா மற்றும் குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்களாக தர்மலிங்கம், ராமதாஸ், திருலட்சுமி ஆகியோர் தகவல் தொழில்நுட்ப அணியின் புதிய நிர்வாகிகளாக செயல்படுவார்கள் என சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., அறிவித்தார்.
மேலும் நெய்வேலி சட்டசபை தொகுதியில் உள்ள 232 பூத்திற்கு பாக அளவிலான புதிய தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளையும் எம்.எல்.ஏ., நியமனம் செய்தார். நெய்வேலி நகர செயலாளர் குருநாதன், தலைவர் நன்மாறபாண்டியன், ஒன்றிய அவைத் தலைவர் வீர ராமச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர் ஜெகநாதன், பொதுக்குழு உறுப்பினர் அறிவழகன், ஒன்றிய துணை செயலாளர் செல்வகுமார், மாவட்ட பிரதிநிதி ஆடலரசன் உள்ளிட்ட குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றியம், பண்ருட்டி தெற்கு மற்றும் வடக்கு ஒன்றியம் மற்றும் நெய்வேலி நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.