ADDED : ஏப் 12, 2026 02:44 PM

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு சுற்று பகுதிகளில் தி.மு.க.,கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
நடுவீரப்பட்டு,சி.என்.பாளையம்,குமளங்குளம்,கொடுக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தி.மு.க.,கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.சி.என்.பாளையத்தில் நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.ஒன்றிய துணை செயலாளர் ராஜேந்திரன்,மாவட்ட விவசாய சங்க தலைவர் வைத்திலிங்கம்,ம.தி.மு.க.,ஒன்றிய செயலாளர் ராமலிங்கம் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக கடலுார் கிழக்கு மாவட்ட பொருளாளர் கதிரவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி ஞானசேகரன்,தி.மு.க.,ஒன்றிய விவசாய தொழிலாளர் சங்க துணை அமைப்பாளர் பாண்டுரங்கன்,இலக்கிய அணி வேல்முருகன்,நெசவாளர் அணி பன்னீர்செல்வம்,தே.மு.தி.க.,ஒன்றிய செயலாளர் குமரேசன்,வி.சி.மண்டல துணை செயலாளர் குணத்தொகையன்,தி.மு.க.,ஒன்றிய இளைஞரணி சதீஷ்குமார்,பொறியாளர் அணி சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
