/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க., கம்பத்தில் வி.சி.,கொடி: மூவர் கைது
/
தி.மு.க., கம்பத்தில் வி.சி.,கொடி: மூவர் கைது
ADDED : நவ 03, 2024 05:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில், தி.மு.க., கொடிக்கம்பத்தில் வி.சி., கட்சி கொடியை ஏற்றிய விவகாரத்தில், மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் புதுப்பாளையம் மினிமார்க்கெட் பகுதியில் உள்ள தி.மு.க., கொடிக்கம்பத்தில் சிலர் வி.சி., கட்சி கொடியை ஏற்றினர். இதை அப்பகுதி தி.மு.க., வட்டசெயலாளர் தேவஅன்பு கேட்டபோது, வி.சி., முகாம் செயலாளர் துரை மற்றும் முரளி, ஜெபின், கோபி, சக்திவேல் ஆகியோருக்குமிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதுகுறித்து தேவஅன்பு அளித்த புகாரின் பேரில், கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து முரளி,49, கோபி,48, சக்திவேல்,48, ஆகியோரை கைது செய்தனர்.