/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க., வழக்கறிஞரணி ஆலோசனை கூட்டம்
/
தி.மு.க., வழக்கறிஞரணி ஆலோசனை கூட்டம்
ADDED : ஆக 03, 2025 03:53 AM

கடலுார்: கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., வழக்கறிஞரணி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். வக்கீல் அருள்ஜோதி வரவேற்றார். தி.மு.க., சட்டத்துறை செயலாளர் இளங்கோ சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் தொடர்பாக பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தில், இணை செயலாளர் ராதாகிருஷ்ணன், ரவிச்சந்திரன், சூர்யா வெற்றி கொண்டான், பச்சையப்பன், வக்கீல் அணி அமைப்பாளர் தினேஷ்குமார், தலைமைக்கழக வக்கீல் சுரேஷ், அய்யப்பன் எம்.எல்.ஏ., தேர்தல் பணிக்குழு செயலாளர் புகழேந்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணன், குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், வடலுார் சேர்மன் சிவக்குமார், தமிழ்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.