கும்பலாக புகுந்த தே.மு.தி.க.வினர் :தேர்தல் நடத்தும் அலுவலர் 'டென்ஷன்'
கும்பலாக புகுந்த தே.மு.தி.க.வினர் :தேர்தல் நடத்தும் அலுவலர் 'டென்ஷன்'
ADDED : ஏப் 06, 2026 09:21 PM
விருத்தாசலம்: விருத்தாசலம் தொகுதியில் மனு தாக்கல் செய்த தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேதலதாவுடன், கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரண்டு வந்ததால், ஆர்.டி.ஓ., கோபமடைந்தார்.
விருத்தாசலம் சட்டசபை தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரமேலதா, நேற்று மனு தாக்கல் செய்ய விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு, பகல் 12;30 மணிக்கு வந்தார். அவருடன் கட்சியினர் கும்பலாக ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்குள் புகுந்தனர்.
இதனை கண்டு கோபமடைந்த தேர்தல் நடத்தும் அலுவலர் விஷ்ணுபிரியா, யாரை கேட்டு அனைவரும் உள்ளே வந்தீர்கள், வேட்பாளருடன் நால்வர் மட்டுமே உள்ளே வர அனுமதி. ஆகையால் மற்றவர்கள் வெளியே செல்லுமாறு கோபமாக கூறினார். தே.மு.தி.க., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வெளியேறிய பின்பு வேட்பாளர் பிரேமலதாவிடன், தேர்தல் நடத்தும் அலுவலர் விஷ்ணுபிரியா மனுவை பெற்று கொண்டார்.
