ADDED : மார் 16, 2026 04:23 AM

ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீமுஷ்ணத்தில் என்.டி.ஏ. கூட்டணியை கண்டித்து தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தி.மு.க. ஒன்றிய செயலாளர் தங்க ஆனந்தன் தலைமை தாங்கினார்.
இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தராஜன், செந்தில்குமார், காங். முன்னாள் மாவட்ட தலைவர் செந்தில்நாதன்,தே.மு.தி.க., வி.சி.க., உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திட்டக்குடி அதேபோல, திட்டக்குடியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, நகர செயலாளர் பரமகுரு தலைமை தாங்கினார். கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.
இதேபோன்று, ஆவினங்குடியில் மங்களூர் ஒன்றிய செயலாளர் அமிர்தலிங்கம் தலைமையிலும், பெண்ணாடத்தில் நகர செயலாளர் குமரவேல் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
காட்டுமன்னார்கோவில் மேலும், காட்டுமன்னார்கோவிலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க., ஒன்றிய செயலாளர் முத்துசாமி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஜெயபாண்டியன், நகர செயலாளர் கணேசமூர்த்தி, கவுன்சிலர் அறிவழகன், இளைஞர் அணி விஜயராகவன், காங்., மணிமொழி, ஜாகீர்உசேன், தே.மு.தி.க., அர்சுணன், வி.சி.க., மாவட்ட செயலாளர் மணவாளன், கம்யூ., கட்சி தேன்மொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

