/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திட்டக்குடி தொகுதிக்கு தே.மு.தி.க., குறி
/
திட்டக்குடி தொகுதிக்கு தே.மு.தி.க., குறி
ADDED : மார் 05, 2026 04:45 AM
-நமது நிருபர் -: தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க கூட்டணி கட்சி களுடன் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி முனைப்பு காட்டி வருகிறது.
அதன்படி, திட்டக்குடி (தனி) தொகுதியில் போட்டியிட தி.மு.க.,வுடன் சமீபத்தில் இணைந்த தே.மு.தி.க., வரும் சட்டசபை தேர்தலில் தங்களுக்கு 'சீட்' வழங்க வேண்டும் என அக்கட்சியின் தலைமைக்கு அழுத்தம் தர துவங்கி உள்ளது.
மேலும் கடந்த, 2011 சட்டசபை தேர்தலின்போது அ.தி.மு.க., கூட்டணியில் திட்டக்குடி தொகுதியில் தே.மு.தி.க., வெற்றி பெற்றது. இதனால் தே.மு.க.தி.க.,வை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், அக்கட்சி தலைமையிடம், திட்டக்குடியை கேட்டுப்பெற, அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
ஏற்கனவே, திட்டக்குடி தொகுதி பெற, தி.மு.க., கூட்டணியில் காங்., வி.சி., விருப்பம் தெரிவித்து, அதை நினைக்கும் நிலையில், தற்போது தி.மு.க., கூட்டணியில் இணைந்த தே.மு.தி.க.,வும் குறி வைத்து, எப்பாடுபட்டாவது திட்டக்குடி தொகுதியை பெற வேண்டும் என மு னைப்பு காட்டி வருகிறது.

