/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க., பயிற்சி பாசறை கூட்டம்
/
தி.மு.க., பயிற்சி பாசறை கூட்டம்
ADDED : டிச 15, 2025 06:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறுபாக்கம்: நெய்வேலியில் தி.மு.க., சார்பில் நடக்கும் பயிற்சி பாசறை கூட்டத்தில் பங்கேற்க, அமைச்சர் கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
கடலுார் மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் 'என் ஓட்டுச்சாவடி வெற்றி ஓட்டுச்சாவடி பயிற்சி பாசறை கூட்டம், இன்று பகல் 3:00 மணியளவில் நெய்வேலி தொ.மு.ச., அலுவலகத்தில் நடக்கிறது. அமைச்சர் கணேசன் தலைமை தாங்குகிறார். அதில், தொகுதி பார்வையாளர்கள், தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, பேரூர், ஒன்றிய செயலர்கள், அனைத்து சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உட்பட அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

