தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ 'தனி' மெஜாரிட்டியுடன் தி.மு.க., ஆட்சி: சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., நம்பிக்கை

 'தனி' மெஜாரிட்டியுடன் தி.மு.க., ஆட்சி: சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., நம்பிக்கை

 'தனி' மெஜாரிட்டியுடன் தி.மு.க., ஆட்சி: சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., நம்பிக்கை


ADDED : ஜன 15, 2026 08:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 15, 2026 08:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெய்வேலி: வரும் சட்டசபை தேர்தலில் 'தனி' மெஜாரிட்டியுடன் தி.மு.க., ஆட்சி அமைக்கும் என, சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., பேசினார்.

நெய்வேலி எம்.எல்.ஏ., இல்லத்தில் நடந்த திராவிட பொங்கல் விழாவில் அவர் பேசியதாவது:

நெய்வேலி தொகுதியில் திருவாமூர், மாளிகம்பட்டு ஊராட்சிகளில், ரூ.93 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலை மற்றும் சீரமைப்பு பணிகள்; காட்டுக்கூடலுார், காங்கேயன்குப்பம் ஊராட்சிகளில் பல கோடியில், ஊராட்சி அலுவலக கட்டடங்கள், புதிய சாலை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்திரா நகர், ஏரிபாளையம் ஊராட்சிகளில் ரூ.2.63 கோடியில் புதிய பள்ளி கட்டடங்கள்; வெங்கடாம்பேட்டை ஊராட்சியில், ரூ.1.50 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையம்; கீழக்கொல்லை கிராமத்தில் ரூ.45 லட்சம் மதிப்பில், துணை சுகாதார நிலையம்; கோ.சத்திரம்-கண்டியாங்குப்பம், 3.கி.மீ., சாலையை ரூ. 4.25 கோடியில் இருவழிச்சாலை விரிவாக்கபணிகள் நடக்கின்றன.

நடுக்குப்பம், சொரத்தங்குழி உள்ளிட்ட கிராமங்களில் புதிய ரேஷன் கடை கட்டடங்கள் திறப்பு; வடக்குத்து ஊராட்சியில் ரூ.2 கோடியில் தார் மற்றும் சிமென்ட் சாலை பணிகள்; வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொகுதியில் மக்கள் ஆதரவுடன் தி.மு.க., ஆட்சி நலத்திட்டங்கள் நிச்சயமாக தொடரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us